states

img

உ.பி: அலிகார் நகரத்தின் பெயர் மாற்றம்?

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தின் பெயரை 'ஹரிகர்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அலிகார் மேயர் சஞ்சய் பண்டிட் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச பாஜக ஆட்சியில் கடந்த 2018-ஆம் ஆண்டில் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என்றும், 156 ஆண்டுகள் பழமையான முகல்சராய் சந்திப்பு பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு என்றும், 2021-இல் பைசாபாத் நகரம் அயோத்தி மாவட்டம் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அலிகார் நகரத்தின் பெயரை 'ஹரிகர்' என மாற்றுவதற்கான தீர்மானம் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அலிகார் மேயர் பிரசாந்த் சிங்ஹல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்மானம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.